Friday, October 10, 2008

மக்களாட்சியின் மாட்சிமை.

பெரும்பான்மை வென்று,
சிறுபான்மை தோற்று 
அமைக்கும் ஆட்சி மக்களாட்சி;

எனவே,
செல்வம் சிலரிடம்,
வறுமை பல ரிடம்,
பழி ஓரிடம்,பாவம் ஓரிடம், 
இன்பம் துய்ப்பவர் சில கோடி, 
துன்பத்தில் உழல்வார் பல கோடி. 
செய்து முடித்தவர் சிலபேர், 
செய்யத் துடிப்பவர் பலபேர். 
 அரசின் நோக்கம் பொது நலம், 
ஆள்வோர் நோக்கம் சுயநலம். 
பொய்யில் சிறந்த இவர்களிடம், 
வாய்மைக்கு ஏது இடம்? 
 நல்லவர் சிலபேர் 
கெட்டவர் பல பேர் , 
கற்றவர் சிலபேர்,
மற்றவர் பலபேர், 
பலபேர் வெல்வார், சில பேர் தோற்பார் இது நீதி; 
கெட்டவன் வெல்வான், நல்லவன் தோற்பான் இது நியதி!