யாருக்காக, இது யாருக்காக?
(வசந்த மாளிகை படம் ”யாருக்காக” மெட்டில்)
பணமதிப்பு நீக்கும் சட்டம் வந்தது,
அது நள்ளிரவில் பதுங்கி வந்தது.
தீர்வு என்று நான் நினைத்தது,
தீரா வியாதி ஆகிவிட்டது.
யானைக்காக வலையைப் போட்டது
அதில் பூனை வந்து மாட்டிக்கொண்டது!
யாருக்காக, இது யாருக்காக;
இரண்டாயிரம், இந்த வேலட்,
பணமே இல்லை, பரிமாற்றம்
யாருக்காக, இது யாருக்காக?
திருடனுக்கு சட்டம் என்பது, அது
வேப்பங்காயை போல கசப்பது,
பண நோட்டுஎன்னும் பேய் ஆனது
அது ஊழலுக்கு வழியை வகுப்பது.
எம் எல் ஏ, எம் பி, விலைக்கு வந்தது
கல்வி, மருத்துவம் எல்லாம் காஸ்ட்லி ஆனது
பில்லு, ரசீது எல்லாம் மறந்து போனது
நோ என்ட்ரி என்றாலும் நோட்டு நுழைந்தது!
பணத்துக்காக கட்சி வந்தது,
கணக்கு கேட்டு கட்சி உடைந்தது!
ஜாதிக்கென்று கட்சி வந்தது ,அதில்
ஜாதிகள் வளர்ந்து சண்டை வந்தது
கருவறை முதல் கல்லறை வரை.
எங்கும்,எதற்கும் பணம் என்றானது
ஆயிரம் கொடுத்தால் வோட்டு
அடுத்தது நீ தான் சி எம்!
மதிப்பு நீக்கும் வெள்ளம் என்பது,
இடத்தை துடைத்து சுத்தம் செய்வது;
பழைய நோட்டு, பழைய கருத்து செல்லாது
டிஜிட்டல் மாற்றம் இனி நிக்காது.
பண்டமாற்று என்றிருந்தது, அது
பணமாற்றுக்கு வழியை விட்டது
கரன்சி கல்ச்சரை கான்சர் பிடித்தது
நோயைவிட தீர்வு வலிப்பது.
பணமதிப்பு நீக்கம் என்பது
காலை வெட்டி உயிரைக் காப்பது.
யாருக்காக, இது யாருக்காக,
இந்த சட்டம், இந்த மாற்றம்
நல்லவனுக்கு நல்லது,
கெட்டவனுக்கு கெட்டது.