உன்னைத்தேடும் கண்களுக்கு உறக்கமில்லை
உன்னைப் பார்த்தபின்னர் நான் உறங்கவில்லை.
பார்த்தால் பசி தீருமென்று நானிருக்க
பாராமலே நீ போவதென்ன?
சந்தனமா உன் தேகம், எனில்
கல்லோ இரும்போ, உன் இதயம்
உன்னிரு வழ வழ கன்னங்கள்,
பார்க்கையில் என்னுள் எண்ணங்கள்.
வாய்திறந்து பேசு, அன்றேல் உன்
விழி அசைவு போதும் எனக்கு
காலம் முழுதும் காத்திருப்பேன்
கரம்பிடிக்க நீ சரியென்றால்