Wednesday, March 21, 2018

கனவுக் காதலி.

1
உன்னில் விழுந்தேன்
என்னை  இழந்தேன்- என்
இதயம் புகுந்தாய்- நான்
என்னை மறந்தேன்.
2
காதல் என்பது, இதுதானோ.
கட்டுப்படுவது ஒரு சுகமோ?
காதல் என்பது கற்பனையோ?
கைகளுக்குள்ளே வசப்படுமோ?.
3
என் கேள்விக்கு நீயே பதிலானாய்
என் தேடலுக்கே நீ பொருளானாய்.
இச்சிப்பதே சுகம் என்றிருந்தேன்;
இசைவதும்,இணைவதும், சுகமென்றாய்.
4
என்றும் வசந்தமென இறுமாந்திருந்தேன்;
ஏனென்று சொல்லாமல் விலகிவிட்டாய்.
இழந்தது காதல், இதயத்தில் காயம்;
காலம் கடந்தும், நிற்குது வடுவாய்.
5
மறந்தும் உன்னை நினைக்கவில்லை;
இருந்துமென் கனவில் வருகின்றாய்.
என்ன செய்ய, எண்ணுகிறாய்?
ஏனடி, என்னைக் கொல்கின்றாய் !