காதலை எதிர்க்கும் சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். இயலாமையின் வெளிப்பாடாக நான் எழுதிய கவிதை (1973-ம் வருடம்).
சேற்றிலே செந்தாமரை- அன்புப்
பூக்கின்ற உந்தன் இதயம் .
ஆசையாய் பார்க்கும் பார்வை,
நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்
எரி தழல் கலந்த பார்வை-என்
இதயத்தை தீயில் வாட்டும்.
பறப்பதற்கு பறவைக்குச் சிறகு வேண்டும்
உயிருக்கு உணவாக உறவு வேண்டும்.
உன்னுயிரத்தனதாய்க் கொள்ளும்
உற்றவள் இல்லையென்றால்-வாழ்க்கை
உப்பு சப்பு அற்றதாகும்.
”என்பக்கம் இல்லை யென்றால் - நீ
எதிரியின் பக்கம் தானே!”
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம்,
அளவற்ற வெறுப்பாய் மாறும்!
நேற்றுப் பிறந்தவன்,இன்று இருப்பவன்,
நாளை மறைபவன் -இடையில் ஏன் போராட்டம்?
ராகங்கள் இல்லாத பாட்டு இல்லை
சோகங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.
உறவுக்கு ஏங்குவது இளமைத்தாகம்-
பிரிவுக்குத் தாங்காது துடித்துப்போகும்.
காதலில் தோற்றுவிட்டால் என்ன ஆகும்?
வாழ்வில்,ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும்.
கட்டவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும்.
மீண்டும்,மீண்டும் காதலைத்தேடித் தோற்கும்.
நினைவுகளைப் பங்கிட துணை வேண்டும்-இல்லை
நீள் துயிலில் நிம்மதியாய் ஆழ வேண்டும்.
சுட்டெரிக்கும் தணலில் வேகா உடம்பு-கண்ணீர்
சொட்டிரண்டு பட்டால் வேகும்!
சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை,
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை.
மண்ணுலகில் நிறைவேறாக் காதல்
வின்ணுலகில் நிறைவேற வாய்ப்பு உண்டு;
ஏனென்றால் திருமணங்கள் அங்கேதானே
நிச்சயக்கப் படுகின்றன
Monday, July 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment