எனது நண்பர் திரு A ஷண்முகம், M.E,
(Retired Professor of Engineering, Coimbatore.
1967 ம்
வருடம் நான் கோவை விவசாயக்கல்லூரியில் எம் எஸ்சி வகுப்பில் சேரும் வரை அவரை எனக்கு
அறிமுகம் இல்லை.நான் படிப்பு முடிந்து அங்கேயே வேலையில் சேர்ந்தபோது திரு ஷண்முகம்
அவர்கள் அறிமுகமானார்.அவர் பொறியியல் துறையில் பணிபுரிந்துவந்தார்.நாளடைவில்
நாங்கள் இருவரும் ஒரே அலை வரிசையில் சிந்திப்பதையும் பேசுவதையும் உணர்ந்து ஒருவர் பால் ஒருவர் அன்பும் பாசமும் வளர்ந்தன. 1973ம் ஆண்டு
நான் விவசாயக்கல்லூரி வேலையை விட்டு (என்ன முட்டாள்தனம்!) வங்கியில் சேர்ந்த போது
அவரைப் பிரிந்தேன் பின்னர் 1979ம் ஆண்டு எனக்கு கோவைக்கு மாற்றல் வந்த போது பழைய
நண்பர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததென மகிழ்ந்தேன். அடுத்த பிரிவு
1982ல் நான் ஈரோட்டுக்கு மாற்றலானபோது. E C TV விளம்பரத்தில்
அப்போதெல்லாம் வரும். “Time will tell the difference” அது எவ்வளவு உண்மை.அவரை நேரில் பார்த்து பல வருடங்கள்
ஆன் பின்னும் அவரது நினைவுகள் மிகவும் பசுமையாக இருக்கின்றன. அவரை நினைத்து எழுதிய
கவிதை இங்கே.
சரிபாதி நாமிருவர் எனப்பாடும் சண்முகனைப் பாடு மனமே,
சதி,பதிக்கு மேலான நட்பைப் போற்று மனமே.
பொங்கு கடல்போல, விரிந்த மனம் கொண்டவனே,
இங்கு நீ இல்லை யென்றால் ஏதேதோ இழந்திருப்பேன்..
ஒரு கோடிப் பேர்களிலே ஒருவனிவன்,
பொருள் தேடி பெறுவதுபோல் பெற்றேனிவனை.
மறுபிறப்பு இல்லாத வாழ்வு வேண்டும் –இருந்தால்
ம்றுபடியும் இவனோடு பிறக்கவேண்டும் !
பதுமைபோல் அழகு,பளிச்சென்ற நிறம்,வேங்கை போல் வீரம்.
இதுவெல்லாம் இல்லை இவரிடம்; ஆனால் என்ன?
பால் போல் தெளிந்த உள்ளம்,ஆல் போல் பரந்த அன்பு,
வேல் போல் கூர் அறிவு,உற்றார்க்கு உதவும் பண்பு
உள்ளதே ஏராளம் தான்.
ஆங்கிலம் படிக்க என்றால் அலறுவோர் மத்தியிலே
இங்கிலீஷ் கதைகள் படிக்க எனக்குக் கிடைத்த தோழன்.
ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் என்றால் எனக்குயிர்,
அவருக்கும் தான்!
நகைச்சுவை என்றால் என்ன? கேட்போர் பலபேர்
அச்சுவை அறிந்த நண்பர், அடிக்கடி சிரிப்பார்
நம்மையும் சிரிக்க வைப்பார்.அவரை நான் boss என்பேன்
என்னை அவர் boss என்பார்!
சுற்றி இருப்பவர்கள் யாருக்கு யார் boss என்று
இரு முடி பிய்த்துக்கொள்வார்,எனக்கொன்று அவருக்கொன்று!
அன்பான மனைவியும்,பாசமிக்க மகளும்,
ஆசைக்கோர் பேத்தியும் பெற்ற நண்பர்:
தூரங்கள் பிரித்தபோதும் நினைவிலே நிற்கின்ற
நேரங்கள் அதிகம்,ஏனெனில் நல்ல நண்பர்.
அளவோடு பழகும் அன்பர், அவர் கதை வள
வள என்றிழுத்தால் அவருக்கு என்ன தோன்றும்?
அறுத்தது போதும் boss , அடுத்ததை
பார்ப்போம் என்பார்.
அடுத்ததை அடுத்ததில் பார்க்கலாமா?
No comments:
Post a Comment