அவள் யாரோ, நான் யாரோ
காலையில் ஒரு முறையும்
மாலையில் ஒரு முறையும்
என் பாதையில் அவளும்
அவள் பாதையும் நானும்
நான் போகையில் அவள்
வருகிறாள் ,…
எதிரும் புதிருமாய் .
அவள் ஸ்கூட்டியில் ,
நான் ஸ்கூட்டரில் .
அவள் இருபது களில் ,
நான் முப்பது களில் .
பார்வைகள் தவிர்க்க
முடியாதவை ;
வார்த்தைகள் வாய் வரை
வந்து நிற்கும் .
சொல்லத் தவிக்கும் மனம் , சொல்லவோ தயக்கம் .
சைகை காட்டினால் தவறாகப்
படுமோ ?
இந்த வயசில் போகுதே புத்தி என்பாரோ யாரும்;
எனக்கு அறுபது , அவளுக்கு இருபது.
இருந்தாலும் இருந்தாலும்
துணிந்து விட்டேன் .
இன்று சொல்லிவிட வேன்டியது
தான் ;
சொல்லியே விட்டேன்,
"மிஸ்
,உங்க வண்டி முன் விளக்கு எரிஞ்சி கிட்டே
இருக்கு" !
என் பாதையில் அவளும்
அவள் பாதையும் நானும்
நான் போகையில் அவள் வருகிறாள் ,…
அவள் ஸ்கூட்டியில் ,
அவள் இருபது களில் ,
பார்வைகள் தவிர்க்க முடியாதவை ;
வார்த்தைகள் வாய் வரை வந்து நிற்கும் .
சொல்லத் தவிக்கும் மனம் , சொல்லவோ தயக்கம் .
சைகை காட்டினால் தவறாகப் படுமோ ?
இந்த வயசில் போகுதே புத்தி என்பாரோ யாரும்;
துணிந்து விட்டேன் .
சொல்லியே விட்டேன்,
"மிஸ் ,உங்க வண்டி முன் விளக்கு எரிஞ்சி கிட்டே இருக்கு" !
No comments:
Post a Comment