தாய் மடி விலகிச்சென்று
தரையிலே மண்ணைத் தின்னும்
குழைந்தை மேல் தவறு இல்லை.
தாவியதை தூக்கிடாமல்
முதுகிலே இரண்டு வைக்கும்
தாயின் மேல் தவறு இல்லை.
நேரம் கழித்துவரும் பதியை
வாசலில் நிற்கவைத்து
கேள்வி பல கேட்கும்
மனைவி மேல் தவறு இல்லை.
விளக்கம் பல சொல்லி
வெறுத்துப் போன கணவன்
கன்னத்தில் இரண்டு
கொடுப்பதில் தவறு இல்லை.
அடிக்கடி விலையேறும் பெட்ரோல்
அதில் ஏதும் தவறு இல்லை.
அதுதான் சாக்கென்று ஆட்டோக்காரர்
ரேட்டை ஏத்தினால் தவறு இல்லை.
விலையேற்றம் எதிர்க்கவென்று
வேலை நிறுத்தம் தவறு இல்லை.
பொருள் விலை ஏறுமென்று
கடையடைப்பு தவறு இல்லை.
தன் காலில் தானே நிற்கும்
மகளுக்கு வரனைத் தேடும்
தந்தை மேல் தவறு இல்லை.
நிச்சயம் முடிந்த பின்னர்
இரவோடு இரவாக
சொல்லாமல் செல்லும்
மகள் மேல் தவறு இல்லை.
மணமேடை வரை வந்து
வரவு குறைவென்று தாலி
கட்டாமல் ஓடும்
தறுதலை மேல் தவறு இல்லை.
அவரவர் செய்வது அவர்களுக்கு சரி.
பேசுவதும் எழுதுவதும் சமூக நீதி
சொல்வதொன்று, செய்வதொன்று அதுவே நீதி!
No comments:
Post a Comment