Wednesday, June 2, 2021

கனவுக் காதலிக்கு ஒரு கடிதம்!

 

உனைத்தேடும் கண்களுக்கு ஓய்வு இல்லை

உனைப் பார்த்தபின்னர் நான் உண்ணவில்லை.

பார்த்தால் பசிதீருமென நானிருக்க - எனைப்

பாராமலே நீ போவதென்ன?

 

சந்தனமா உன் தேகம், எனில்

கல்லோ இரும்போ, உன் இதயம்

உன்னிரு வழ வழ  கன்னங்கள், பார்க்கையில்

என்னுள் ஏதேதோ எண்ணங்கள் !


உறக்கமில்லா இரவுகள்- நன்றி,

இரக்கமில்லா உன் நினைவுகள்

 குளிருக்கு இதமான கம்பளியாய்

கோடையை குளிர்விக்கும் மழையாய்,

எப்போது நீ வருவாய், ஏங்குதடி என் மனது;

அல்லி மொட்டாய் காத்திருக்க, வாராய்  நிலவே


வாய்திறந்து பேசு, அன்றேல் உன்

விழி அசைவு போதும் எனக்கு

காலம் முழுதும் நான் காத்திருப்பேன்

கரம்பிடிக்க நீ சரியென்றால் !

ராஜசுப்ரமணியன் S

 

 

 

 

 

No comments: